விதியை மீறிய கிறிஸ் கெய்ல்... அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!

விதியை மீறிய கிறிஸ் கெய்ல்... அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் அதிரடி!


chris-gayle-fined-for-flimging-bat

நேற்று நடைபெற்ற 50 ஆவது ஐபிஎல் டி20 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். 63 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த கெய்ல் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டானார்.

chris gayle

சதம் அடிக்க முடியாமல் அவுட்டான விரக்தியில் கெய்ல் பேட்டினை தரையில் ஓங்கி அடிக்க முயன்றார். ஆனால் பேட் கையிலிருந்து நழுவி தூரமாக பறந்து விழுந்தது.  கெய்லின் இந்த ஆக்ரோஷம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஐபிஎல் விதிமுறையை மீறி கெய்ல் இவ்வாறு செய்ததை கண்டித்து நேற்றை ஆட்டத்தில் அவரது சம்பளத்தில் 10 சதவிகிதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மேலும் இந்த அபராதத்தை கெய்ல் ஏற்றுக்கொண்டுள்ளார்.