இன்று சென்னை வெற்றிபெறுவது சற்று சந்தேகம்தான்! என்ன சொல்கிறது புள்ளி விவரம்?



Chennai vs Rajasthan who will win today match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 24 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை அணி முதல் இடத்திலும், கொல்கத்தா, மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது. இன்று நடைபெறும் 25 வது ஆட்டத்தில் சென்னை அணி ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. ராஜஸ்தானின் சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய ஆட்டமானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் சென்னை அணி 5 போட்டிகளிலும், 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை ராஜஸ்தான் அணிகளை பொறுத்தவரை இதுவரை இந்த அணிகளுக்கு இடையே நடைபெற்ற 21 போட்டிகளில் சென்னை அணி 13 போட்டியிலும், ராஜஸ்தான் அணி 8 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.

chennai super kings

ராஜஸ்தான் சொந்த மைதானத்தில் நடந்த 6 போட்டிகளில் ராஜஸ்தான் 4 போட்டிகளிலும், சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் தனது சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் அதிகம் வெற்றிபெற்றுள்ளது. இன்றய போட்டியானது ராஜஸ்தான் சொந்த மண்ணில் நடைபெறுவதால் சென்னை அணி வெற்றிபெறுவது சற்று கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த போட்டிகளில் விளையாண்டது போல் சிறப்பாக விளையாண்டாள் சென்னை அணி வெற்றி பெறுவது உறுதி.

chennai super kings