ராஜஸ்தானின் கோட்டையை தகர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்..!! 2 வது முறையாக இன்று மோதல்..!!

ராஜஸ்தானின் கோட்டையை தகர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்..!! 2 வது முறையாக இன்று மோதல்..!!



Chennai Super Kings-Rajasthan Royals clash for the 2nd time in the 37th match of the league tonight in Jaipur.

ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் 37 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 வது முறையாக மோதுகின்றன.

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 36 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் 37 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 வது முறையாக மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்று  ஐதராபாத், டெல்லி, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும் பஞ்சாப், லக்னோ, பெங்களூரு அணிகளிடம் தோல்வியும் கண்டு 8 புள்ளிகளுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் யுவேந்திர சாஹல் 12 , டிரென்ட் பவுல்ட் 9, அஸ்வின் 9 சந்தீப் ஷர்மா  7 விக்கெட்களை வீழ்த்தி வலுசேர்க்கின்றனர்.

சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்று லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியும் கண்டு  10 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும்  சென்னை அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் அதன் தொடக்க வீரர்கள் டெவன் கான்வே 314, ருதுராஜ் கெய்க்வாட் 270 ரன்கள் குவித்து அமர்களப்படுத்தி வருகின்றனர். மிடில் ஆர்டரில் ரஹானே 209, ஷிவம் துபே 184  கலக்கி வருகின்றனர். பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே (12 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (10 விக்கெட்), மொயீன் அலி (7 விக்கெட்), பதிரானா, தீக்ஷனா ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 27 போட்டிகளில் மோதியதில் சென்னை 15, கொல்கத்தா 12 வெற்றிகளை பெற்றுள்ளன. கடைசியாக சென்னையில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.