அஸ்வினை பின்னுக்கு தள்ளிய ஜட்டு பாய்.. மாஸ் சம்பவத்தில் அசத்தல் சாதனை இதோ..!Chennai Super Kings Jadeja Wicket Champion List

 

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கும் - சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இறுதியில் 138 ரன்கள் அடித்த சென்னை அணி வெற்றி அடைந்தது. 

இந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜடேஜா நேற்று 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் வாயிலாக அவர் சென்னை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார்.

sports

அஸ்வின் சென்னை அணிக்காக 120 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், ஜடேஜா தற்போது வரை 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலமாக ஜடேஜா இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். பிராவோ 154 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் நீடித்து வருகிறார்.