இந்தியா விளையாட்டு WC2019

தல தோனிக்காக கப்திலை பழிதீர்த்த பட்லர்! உச்சகட்ட மகிழ்ச்சியில் தோனியின் ரசிகர்கள்!

Summary:

butler revende kuptil for MS Dhoni


நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில், உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து  241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிய 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.

நேற்றைய ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

நேற்றைய ஆட்டத்தில் சூப்பர் ஓவரின் இறுதியில் நியூசிலாந்து அதிரடி மடையாளர் கப்திலை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பட்லர் ரன் அவுட் செய்தார். இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப்போட்டியில் கப்தில், தோனியை ரன் அவுட் செய்து போட்டியின் முடிவை மாற்றினார். 

இந்தநிலையில் நேற்று, பட்லர், கப்திலை ரன் அவுட் செய்ததை தல தோனியின் ரசிகர்கள் பட்லர் கப்திலை பழிதீர்த்து விட்டதாக சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement