விளையாட்டு WC2019

இங்கிலாந்தில் வீசத் துவங்கியது பும்ரா புயல்! ஆரம்பத்திலே ஆட்டம்கண்டது தென்னாப்பிரிக்கா

Summary:

Bumra started striking in worldcup

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய உலககோப்பை தொடரில் இந்தியாவை தவிர மற்ற அனைத்து அணிகளும் ஏற்கனவே ஆடிவிட்டன. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் ஆடுகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் சமி, ஜடேஜா, விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நான்காவது பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் இறங்குகிறார்.

காயம் காரணமாக சென்ற ஆட்டத்தில் ஓய்வெடுத்த ஆம்லா இன்று ஆடுகிறார். தென்னாப்பிரிக்கா அணியின் டிகாக் மற்றும் ஆம்லா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கனர். முதல் ஓவரை புவனேஸ்வர் வீச 2 ரன்கள் எடுத்தனர்.

இரண்டாவது ஓவரை பும்ரா மிரட்டலாக வீசினார். அந்த ஓவரில் டிகாக் 6 பந்துகளில் ஒரு பந்தினை மட்டுமே பேட்டில் தொட முடிந்தது. பின்னர் மீண்டும் 4 ஆவது ஓவரை வீசிய பும்ரா இரண்டாவது பந்தில் ஆம்லாவின் விக்கெட்டை எடுத்து வெளியேற்றினார். பின்னர் 6ஆவது  ஓவரின் 5 ஆவது பந்தில் டிகாக்கையும் அவுட்டாக்கினார் பும்ரா.

6 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டூப்ளஸிஸ் மற்றும் டூசன் ஆடி வருகின்றனர்.


Advertisement