ஐயோ பாவம்! ஒரே ஒரு ஆட்டத்தால் முதலிடம் பறி போச்சே - கலக்கத்தில் பும்ராBumra missed first place last test match

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசையின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரால் இந்த பட்டியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மூன்றாவது போட்டியில் விளையாட முடியாமல் போனதால் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பெறும் வாய்ப்பினை இழந்துள்ளார். தற்போது பும்ரா 703 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் டிரென்ட் போல்ட் 704 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளனர். 

bumra

மேலும் ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி நான்காம் இடத்திலும் ரோகித் சர்மா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் ஆல்-ரவுண்டராக தனது முழு திறமையை வெளிப்படுத்திய ஹார்திக் பாண்டியா ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் 13 இடங்கள் முன்னேறி தற்போது 8-வது இடத்தில் உள்ளார். கடைசி போட்டியில் 125 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 25 இடங்கள் முன்னேறி 52-வது இடத்தில் உள்ளார்.