எனக்கு சோகமான நாள்.. எனது நண்பன் பொல்லார்டை காணவில்லை..! பிராவோ வெளியிட்ட பதிவு.!

எனக்கு சோகமான நாள்.. எனது நண்பன் பொல்லார்டை காணவில்லை..! பிராவோ வெளியிட்ட பதிவு.!


bravo-talk-about-pollard

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "ஸ்ரீவல்லி" பாடலுக்கு  நடிகர் அல்லு அர்ஜுனை போலவே நடனமாடி வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்தநிலையில் பொல்லார்டை காணவில்லை என பிராவோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களாக வலம் பொல்லார்டு, டுவைன் பிராவோ இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஐபிஎல் போட்டியில் இவர்கள் எதிர் எதிர் அணியில் விளையாடினாலும் ஒருவரை ஒருவர் கிண்டல், கேலி செய்து மைதானத்தில் விளையாடி ரசிகர்களை குதூகலப்படுத்துவார்கள்.

அந்த வகையில், பிராவோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது உண்மையிலேயே ஒரு சோகமான நாள் நண்பர்களே. எனது சிறந்த நண்பர் கிரன் பொல்லார்டுடை காணவில்லை நண்பர்களே, உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் தயவு செய்து எனக்கு இன்பாக்ஸ் செய்யவும் அல்லது போலீசில் புகார் செய்யவும்" என கூறி அதனுடன் சிரித்த படங்களை சேர்த்து பகிர்ந்துள்ளார்.