புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
புள்ளி பட்டியலில் முந்தப்போவது யார்..?!! பெங்களூரு-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்..!!
இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 36 வது லீக் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 36 வது லீக் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இவ்விரு அணிகளும் கொல்கத்தாவில் மோதிய முதல் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்ற நிலையில், 2 வது முறையாக இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள பெங்களூரு அணி 3 வெற்றி 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5 வது இடத்தை பிடித்துள்ளது.
அந்த அணியின் கேப்டன் பாப்-டூ-பிளசி காயம் காரணமாக இம்பாக்ட் வீரராக களமிறங்குவதால் விராட் கோலி அணியை வழிநடத்தி வருகிறார். பெங்களூரு அணிக்கு பேட்டிங் வரிசையில் பாப்-டூ-பிளசி 405 ரன், விராட் கோலி 279 ரன், கிளைன் மேக்ஸ்வெல் 253 ரன் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் முகமது சிராஜ் 13 விக்கெட், ஹர்ஷல் பட்டேல் 10 விக்கெட் வலு சேர்க்கின்றனர் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளிலும் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய பெங்களூரு அணி அதே உத்வேகத்துடன் களமிறங்கும்.
இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள கொல்கத்தா அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த கொல்கத்தா வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடும். அந்த அணியின் பேட்டிங் வரிசையில் ரின்கு சிங் 233 ரன், வெங்கடேஷ் அய்யர் 254 ரன் வலு சேர்க்கின்றனர். சுனில் நரைன் 7 போட்டியில் 6 விக்கெட்) வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 7 போட்டியில் ஆடி 1 விக்கெட் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
சிறிய மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளுமே ரன் குவிப்பில் ஈடுபடும் என்ற போதிலும் உள்ளூரில் விளையாடுவது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.