ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..! ஆறுதலும் ஏமாற்றமும் கலந்த பெயர் பட்டியல் உள்ளே!bcci-announced-team-india-for-asia-cup-2022

வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்க உள்ள ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான 15 இந்திய அணி வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

வீரர்கள்: ரோகித் சர்மா(C), கே எல் ராகுல்(VC), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட்(WK), தினேஷ் கார்த்திக்(WK), ஹார்திக் பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், சாகல், பிஸ்னாய், புவனேஸ்வர் குமார், ஹர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்

இந்த பட்டியலில் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவின் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விளக்கத்தையும் அளித்துள்ள பிசிசிஐ காயம் காரணமாக பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் அணி தேர்வில் இடம்பெறவில்லை. இருவரும் பெங்களூர் NCA-வில் கண்காணிப்பில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஸ்ரேயஸ் ஐயர், அக்ஷர் படேல், தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த பட்டியலில் கே எல் ராகுலின் வருகை மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.