ஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி.! உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.?

ஒருநாள் போட்டியை T20 போல் ஆடிய ஆஸ்திரேலிய அணி.! உச்சகட்ட இலக்கை தகர்க்குமா இந்திய அணி.?


austrelian team played very well

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
 
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் ஆரம்பத்திலிருந்து அதிரடியாக விளையாடினர்.

austrelia

அதிரடியாக ஆடிய ஆரோன் பிஞ்ச் 69 பந்துகளுக்கு 60 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து டேவிட்  வார்னரும் 77 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்மித் மற்றும் லபுஸ்சாக்னே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ஸ்மித் 64 பந்துகளுக்கு 104 ரன்கள் எடுத்தநிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஸ்சாக்னே 61 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுத்தநிலையில் மயங் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேக்ஸ்வெல் 28 பந்துகளுக்கு 68 ரன்கள்  எடுத்த நிலையிலும், ஹென்றிகஸ்  ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் எடுத்துள்ளனர்.