நேற்றைய சொதப்பலான ஆட்டம்! போட்டியை தலைகீழாக மாற்றிய ஒற்றை மனிதன்!



austrelia won yesterday match

உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவுற்றுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதல் பேட்டிங் செய்த  ஆஸ்திரேலிய அணி ஆரம்பதில் சொதப்பலாக ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்தநிலையில் அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் கவுல்டெர் நைல் அதிரடியாக ஆடி 60 பந்துகளுக்கு 92 ரன்கள் எடுத்து ஆட்டத்தையே மாற்றினார்.

australia vs west indies

அந்த அணியின் ஸ்மித்103 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அலெக்ஸ் கரே 55 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராத்வொயிட் 3 விக்கெட்டுகளும், தாமஸ், காட்ரெல் மற்றும் ரஸல் தலா 2 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.

australia vs west indies

பின்னர் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கீப்பர் ஹோப் 105 பந்துகளுக்கு 68 ரன்களும், அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் 57 பந்துகளுக்கு 51 ரன்களும் மற்றும் நிலோலஸ் பூரான் 40 பந்துகளுக்கு 36 ரன்களும் எடுத்திருந்தனர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் மட்டுமே எடுத்து, ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அபாரமாக பந்துவீசிய ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.