நீச்சல் குளத்தில் தவறி விழுந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.! அடக்க முடியாமல் சிரித்த சக வீரர்கள்.! வைரல் வீடியோ

நீச்சல் குளத்தில் தவறி விழுந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.! அடக்க முடியாமல் சிரித்த சக வீரர்கள்.! வைரல் வீடியோ


austrelia cricketr fall down in swimming pool

பாகிஸ்தான் ஹோட்டலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி தவறுதலாக நீச்சல் குளத்தில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் விளையாடுகின்றனர். அதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கராச்சியில் உள்ள ஹோட்டலுக்கு வந்தனர்.

அப்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி மறக்க முடியாத ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது அவர் நாதன் லியோனுடன் பேசிக்கொண்டே நீச்சல் குளத்தின் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார். இதைப் பார்த்த சம்பவ இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நீச்சல் குளத்தில் விழுந்த கேரியம் தான் விழுந்ததை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஏதார்த்தமாக தனது மொபைல் போனில் படம்பிடித்துவிட்டார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.