இந்தியாவை விட 2 ரன்கள் அதிகமாக எடுத்த ஆஸ்திரேலியா! இங்கிலாந்திற்கு அருமையான வாய்ப்பு

இந்தியாவை விட 2 ரன்கள் அதிகமாக எடுத்த ஆஸ்திரேலியா! இங்கிலாந்திற்கு அருமையான வாய்ப்பு


Australia took 2 runs ahead india

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது அனல் பறக்கும் பந்து வீச்சால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது.

முதல் ஏழு ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சந்தித்த முதல் பந்திலேயே தனது ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

wc2019

அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரில் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஏழாவது ஓவரில் ஹான்ட்ஸ்கோம்ப் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் முதல் ஏழு ஓவர்களிலேயே 14 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்தார் கேரி மற்றும் ஸ்டீபன் ஸ்மித் நிதானமாக ஆடினர். 46 ரன்கள் எடுத்து அலெக்ஸ் கேரி அவுட் ஆன பின்பு அதே ஓவரில் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் மேக்ஸ்வெல் 22, கம்மின்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

wc2019

அதன்பின்னர் பத்து ஓவர்கள் ஜோடி சேர்ந்து ஆடிய ஸ்டீபன் ஸ்மித்(85) மற்றும் மிச்செல் ஸ்டார்க் (29) இருவரும் 48 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 49 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் வோக்ஸ் மற்றும் அதில் ரசீது 3 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.