விளையாட்டு

மீண்டும் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இங்கிலாந்திற்கு எதிரான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

Summary:

Australia squad for england tour of cricket

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செப்டம்பர் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா வீரர்கள் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் 21 வீரர்களின் பட்டியலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு மன அழுத்தம் காரணமாக ஓய்விற்கு சென்ற மேக்ஸ்வெல் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் சமீபத்தில் ஏற்பட்ட முழங்கை காயத்திலிருந்தும் மீண்டுவிட்டார்.

ஆஸ்திரேலியாவின் இந்த பட்டியலில் அதிரடி பேட்ஸ்மேன் பிலிப், வேகப்பந்து வீச்சாளர்கள் சாம்ஸ் மற்றும் மெர்டித் என 3 அறிமுக வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். கவாஜா இடம்பெறவில்லை.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி செப்டம்பர் 4 ஆம் தேதியும் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதியும் துவங்குகிறது. கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறுகிறது.


Advertisement