இந்தியாவை போன்றே சரிந்தது ஆஸ்திரேலியாவின் அஸ்திவாரம்! கெத்து காட்டும் இங்கிலாந்து

இந்தியாவை போன்றே சரிந்தது ஆஸ்திரேலியாவின் அஸ்திவாரம்! கெத்து காட்டும் இங்கிலாந்து


Australia lost 3 wickets in 7 overs

இன்று நடைபெற்று வரும் உலககோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்று முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்தது போன்று இன்று இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது.

wc2019

முதல் ஏழு ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணியின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சந்தித்த முதல் பந்திலேயே தனது ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரில் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஏழாவது ஓவரில் ஹான்ட்ஸ்கோம்ப் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் முதல் ஏழு ஓவர்களிலேயே 14 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி.

wc2019

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 20 ஓவர்கள் முடிவில் சிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.