"ஆஸி வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டும் போதும்" சொந்த அணியையே கேலி செய்த இந்திய வீரர்!

"ஆஸி வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டும் போதும்" சொந்த அணியையே கேலி செய்த இந்திய வீரர்!


Aus need only 3 wickets to win

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

பெர்த்தில் நடைபெற்றுவரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இன்று 243 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

2nd test

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா "இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் தேவை. ஆனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வெரும் 3 விக்கெட்டுகளை போதும். அந்த விக்கெட்டுகள் புஜாரா, கோலி மற்றும் ரகானே" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த மூன்று வீரர்களை தவிர இந்த போட்டியில் ஆடும் மற்ற வீரர்கள் யாரும் சரியாகப் ஆடப் போவதில்லை என்பதை முன்கூட்டியே கேலி செய்யும் விதமாக சக அணி வீரரான ஜடேஜா பதிவிட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

2nd test

முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டியில் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டதால் இந்த போட்டியில் ஜடேஜா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழற் பந்து வீச்சாளர்களே இல்லாமல் இந்த போட்டியில் இந்திய அணி விளையாடுவது குறிப்பிடத்தக்கது.