இந்தியா விளையாட்டு

சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல்.. இருவர் பலி!

Summary:

Auresh rain uncle family brutally attacked by robbers

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2020 தொடரில் கலந்துகொள்ள துபாய் சென்றார். ஆனால் அங்கிருந்து அவசர அவசரமாக இந்தியா திரும்பிய அவர் ஐபிஎல் 2020 தொடரில் இருந்து நீங்கினார்.

சொந்த பிரச்சனை காரணமாக ரெய்னா நாடு திரும்பிவிட்டார் என்ற தகவலை தவிர வெறு எந்த காரணமும் இத்தனை நாட்களாக வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அனைவரின் கேள்விக்கும் விடைகொடுத்துள்ளார் ரெய்னா.

தனது ட்விட்டர் பக்கத்தில், தன் மாமா, அத்தை மற்றும் அவரது இரண்டு மகன்களும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். அதில் சம்பவ இடத்திலேயே மாமா உயிரிழந்துவிட்டார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மாமா மகனும் நேற்றிரவு இறந்துவிட்டார்.

எனது அத்தை தற்போது தீவிர சிகிச்சையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால் அன்றிரவு உண்மையில் என்ன நடந்தது, யார் இதை செய்தார்கள் என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. பஞ்சாப் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


Advertisement