இதுதான் முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை.! அப்புறம் யாரும் என்னைக் குறை கூற வேண்டாம்.! அஸ்வின் அதிரடி.!

இதுதான் முதல் மற்றும் கடைசி எச்சரிக்கை.! அப்புறம் யாரும் என்னைக் குறை கூற வேண்டாம்.! அஸ்வின் அதிரடி.!


aswin-talk-about-yesterday-match

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் மன்கட் முறையில் அவுட் செய்யாமல் இருந்தது ஏன் என அஸ்வின் ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த போது ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார், அந்த அவுட்  விவாதத்திற்கு உள்ளானது. இந்தநிலையில் நேற்றைய  ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அஸ்வின் வீசிய போது எதிர்முனையில் நின்று கொண்டிருந்த பின்ச் பந்து வீசுவதற்கு முன்பே கிரீஸை விட்டு நகர்ந்திருந்தார். 

அதை  கவனித்த அஸ்வின் பந்து வீசாமல் மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன் என பின்சை எச்சரிப்பது போல சிரித்த முகத்துடன் சென்றார் அஸ்வின். இந்தநிலையில் அஸ்வின் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருது தெரிவித்துள்ளார். அந்த பதிவில், " 2020 ஆம் ஆண்டிற்கான முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை என தெளிவு படுத்துவோம். நான் இதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன், பின்னர் என்னைக் குறை கூற வேண்டாம்." என பதிவிட்டுள்ளார்.