புதிய உலக சாதனையை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்! மகிழ்ச்சியில் தமிழக ரசிகர்கள்!

புதிய உலக சாதனையை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்! மகிழ்ச்சியில் தமிழக ரசிகர்கள்!


aswin-got-new-world-record


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, T20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரண்டு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை சொந்த மண்ணில் 249 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அஸ்வின், முதல் நாள் ஆட்டத்தில் மொமினும் ஹக், மக்மதுல்லா விக்கெட்டையும் வீழ்த்தி, வங்கதேச அணியின் முதல் இன்னிங்க்ஸில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

aswin

இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணித்தலைவர் மொமினும் ஹக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்தார். தற்போது சொந்த மண்ணில் 251 டெஸ்ட் விக்கெட்களை வைத்துள்ள அஸ்வின் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே வரிசையில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் மிக விரைவில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முத்தையா முரளிதனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார், இருவரும் 42 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர்.