வேலையே இல்லேனா பரிசு என்னத்துக்கு; ஆவேசத்துடன்!.. இந்திய வீராங்கனை.

வேலையே இல்லேனா பரிசு என்னத்துக்கு; ஆவேசத்துடன்!.. இந்திய வீராங்கனை.



asia-medalist-sutha-sing-udrapradesh

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற உத்திரப்பிரதேச மாநில வீராங்கனை சுதா சிங் அம்மாநில அரசின் பரிசுத் தொகையான 30 லட்சத்தை வாங்க மறுத்துவிட்டார்.

ஸ்டீப்பிள் சேஸ் வீராங்கனையான சுதா சிங் 3000 மீட்டர் போட்டியில் வென்று ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார். தொடர்ந்து அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தந்தவர்.

Tamil Spark

இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த இவருக்கு உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள விளையாட்டு துறை இயக்குனரகத்தில் வேலை வழங்குவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இன்னும் அவருக்கு வேலை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 ம் தேதி உ.பி மாநிலத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ராம் நாயக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

Tamil Spark

இவ்விழாவில் கலந்து கொண்ட சுதா சிங் அரசு உறுதியளித்தபடி எனக்கு இன்னும் வேலை வழங்க வில்லை. இனிமேலும் வேலை வழங்கவில்லை என்றால் பரிசுத் தொகையான 30 லட்சத்தை திருப்பி கொடுக்கும் முடிவில் இருப்பதாகவும் பிறகு உத்திரபிரதேச மாநிலத்தை விட்டே வெளியேற இருப்பதாகவும் ஆவேசமாக கூறினார்.