விளையாட்டு

சிகர் தவான் அதிரடி சதம்: ட்விட்டரில் வாழ்த்திய ரசிகர்கள்..! ஹாங் காங்கிற்கு 286 இலக்கு...!

Summary:

asia-cup-india-vs-honkong

தற்போது ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று 
 போட்டிகள் நடைபெற்ற நிலையில் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய ஹாங் காங்கிற்கு எதிராக விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஹாங் காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் சதம் அடித்தார்.

டாஸ் வென்ற ஹாங் காங் அணி கேப்டன் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தொடக்கம் முதல் நன்றாக ஆட தொடங்கினாலும் இந்தியா 7.4 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது ரோகித் சர்மா 22 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இருவரும் மிகவும் அற்புதமாக ஹாங் காங் பந்து வீச்சை அடித்து ஆடி அவர்கள் இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இந்தியாவின் ஸ்கோர் 29.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்பதி ராயுடு 70 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு தவான் – அம்பதி ராயுடு ஜோடி 116 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் சற்று பொறுமையாக ஆட தொடங்கினார்கள். அவ்வப்போது அரைசதம் அடித்த தவான் பொறுமையாக விளையாடி அதை முழு சதமாக மாற்றினார். இந்தியா 198 ரன் எடுத்திருக்கும்போது 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதமாகும்.

இதனை தொடர்ந்து தவான் ரசிகர்கள் அனைவரும் தனது சமூக வலைப்பக்கத்தில் ட்விட்டரில் தாவணி பாராட்டி பதிவு செய்துகொண்டு இருக்கின்றனர். 


Advertisement