ஆசிய கோப்பை 2023: 6 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை..!!

ஆசிய கோப்பை 2023: 6 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை..!!



asia-cup-2023-final-the-sri-lankan-team-is-reeling-at-t

ஆசிய கோப்பை 2023 இறுதி போட்டியில் இலங்கை அணி 6 ஓவர்களில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில், இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. நேபாளம், ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்ற இலங்கை இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதிபெறுவது இது 11 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி கொழும்பில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இதன் படி அந்த அணியின் தொடக்க ஜோடி பதும் நிசங்கா-குஷால் பெரோரா ஜோடி களமிறங்கியது. தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரிட் பும்ரா 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 4 வது ஓவரை வீசிய முகமது சிராஜ், நிசங்கா (2), சமர விக்ரமா (0), அசலங்கா (0) மற்றும் தனஞ்செயா டிசில்வா (4) ஆகியோரை வெளியேற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார். மேலும் 6 வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகாவை (0) கிளீன் போல்டாக்கி அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக 6 ஓவர்களின் முடிவில் 12 ரன்கள் எடுத்துள்ள இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.