எனது இதயம் நொறுங்கிவிட்டது! கிரிக்கெட் வீரர் அஸ்வின் அதிரடி ட்வீட்! ஏன் தெரியுமா?Ashwin talks about zimbabwes suspension

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜூலை 14 ஆம் தேதி முடிவடைந்தது, நியூசிலாந்து - இங்கிலாந்து மோதிய இறுதி ஆட்டத்தில், அதிக பவுண்டரி முறையில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

உலகக்கோப்பை போட்டிகள் முடிந்து ஓரிரு வாரங்களே ஆகும் நிலையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

ஒருகாலத்தில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஜிம்பாப்வே அணியின் இந்த நிலைமையை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜிம்பாப்வே அணியில் இருக்கும் ஒருசில அரசியல் தலையீடுகள்தான் இதற்கு காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

World cup 2019

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் ஜிம்பாப்வே அணியையை ஐசிசி இடைக்கால தடைவிதித்த செய்தியை கேள்விப்பட்டதும் என் இதயம் நொருங்கிவிட்டது என ட்விட் செய்துள்ளார். மேலும் ஜிம்பாப்வே அணி வீரர்களின் நிலை என்ன ஆகும்? ஜிம்பாப்வே அணி மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வெற்றிபெற இறைவனை வேண்டுவதாக அஸ்வின் கூறியுள்ளார்.