ஒரே ஆட்டத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய வாட்சன்! பிரமித்துப்போன ரசிகர்கள்! - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

ஒரே ஆட்டத்தில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிய வாட்சன்! பிரமித்துப்போன ரசிகர்கள்!

ஐபில் சீசன் 12 நேற்றுடன் முடிந்தது. சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வென்றி பெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் எடுத்தது. 150 ரன் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் டுப்ளஸி மற்றும் வாட்சன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

ஒருகட்டத்தில் டுப்ளஸி ஆட்டம் இழக்க, வாட்சன் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி சென்னை அணியை வெற்றியின் அருகில் அழைத்துச்சென்றார். ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை போராடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன் எடுத்தார்.

இந்த சீசனில் ஒரு போட்டியை தவிர வேறு எந்த போட்டிகளிலும் சரியாக விளையாடாத வாட்சன் சென்னை அணி ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்தார். குவாலிபைர் 2 , இறுதி போட்டியில் நிச்சயம் வாட்சன் வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் ஆதரவை பெற்றார் வாட்சன்.

குறிப்பாக இறுதி போட்டியில் வாட்சன் மட்டும் சரியாக ஆடாமல் இருந்திருந்தால் சென்னை அணி மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்திருக்கும். ஆனால், வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் சென்னை அணி வெற்றியின் அருகில் சென்று 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒரே போட்டியில் வான் அளவு உயர்ந்து மீண்டும் சென்னை அணி ரசிகர்களின் பேவரைட் பேட்ஸ்மேனாக மாறிவிட்டார் வாட்சன்.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo