யுவராஜின் சாதனையை ஈடுகட்டிய ஆப்கானிஸ்தான் வீரர்!. பறக்கவிட்ட 6 சிக்ஸர்கள்! வைரல் வீடியோ!.

யுவராஜின் சாதனையை ஈடுகட்டிய ஆப்கானிஸ்தான் வீரர்!. பறக்கவிட்ட 6 சிக்ஸர்கள்! வைரல் வீடியோ!.


afghanistan player done a record

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. சார்ஜாவில் நடந்த போட்டியில் காபுல் ஸ்வானை மற்றும் பல்கி லெஜண்ட் ஆகிய அணிகள் மோதின.

அதில் காபுல் ஸ்வானை அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய், 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்குமுன் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் என்றால் அனைவர்க்கும் ஞாபகத்தில் வருவது யுவராஜ்சிங் தான்.

பல்கி லெஜண்ட் அணியின் அப்துல்லா மஜாரி 4வது ஓவரை வீசினார். இதனை எதிர்கொண்ட ஹஸ்ரசத்துல்லா முதல் 2 பந்துகளை சிக்சர்களாக விளாசினார். 3வது பந்து அகலபந்தாக(வைடு) சென்றந்தது. ஆனாலும் அடுத்த 4 பந்துகளையும் விரட்டி விரட்டி சிக்சர்களாக விளாசினார் ஹஸ்ரசத்துல்லா. 

அவர் 17 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்தார். இந்நிலையில், ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய 6வது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரசத்துல்லா பெற்றுள்ளார். அவர் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.