ஓய்வு பெற்ற பிறகும் ஓயாமல் அடித்து நொறுக்கும் ஏபி டிவில்லியர்ஸ்! எங்கு தெரியுமா?

ஓய்வு பெற்ற பிறகும் ஓயாமல் அடித்து நொறுக்கும் ஏபி டிவில்லியர்ஸ்! எங்கு தெரியுமா?


Ab de villiiers scored maximum in vitality t20 blast

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் மற்றும் முன்னாள் கேப்டனான ஏபி டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்பு சில நாடுகளில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஏபி டிவில்லியர்ஸ். தற்பொழுது அதே திறமையை இங்கிலாந்தில் நேற்று துவங்கிய உள்நாட்டு வைடாலிட்டி டி20 ப்ளாஸ்ட் தொடரிலும் ஜொலிக்கத் துவங்கிவிட்டார்.

Abdevilliers

இந்த தொடரில் நேற்று தான் முதல்முறையாக ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கினார். லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணிக்காக ஆடிய நீ ஏபி டிவில்லியர்ஸ் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார் அதில் நான்கு பவுண்டரிகளையும் ஆறு சிக்சர்களையும் விளாசி மிடில்செக்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.

Abdevilliers

உலக கோப்பை தொடரின் போது தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பெற ஏபி டிவில்லியர்ஸ் முயற்சி செய்ததாகவும் அதற்கு நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை எனவும் ஒரு சர்ச்சை கிளம்பியது. இதற்கு விளக்கம் அளித்த ஏபி டிவில்லியர்ஸ் தான் யாரையும் வற்புறுத்தவில்லை எனத் தெரிவித்தார்.