விளையாட்டு

பரபரப்பான மூன்றாவது டி20 போட்டி! புதிய வரலாற்று சாதனை படைக்குமா இந்தியா?

Summary:

3 rd t20 against india and newzland

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வென்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது. 

இந்திய அணி இதுவரை நியூசிலாந்து மண்ணில் அவர்களுக்கு எதிராக ஒரு டி20 தொடரை கூட கைப்பற்றவில்லை. ஆனால் இந்த தொடரில் எஞ்சியுல்ல 3 போட்டிகளில் ஒன்றை வென்றாலே கோலி தலைமையிலான இந்திய அணி புதிய வரலாற்று சாதனையை படைத்து விடும். 

பேட்டிங்குக்கு சாதகமான ஹாமில்டன் மைதானத்தில் நிச்சயம் இமாலய ஸ்கோரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதனை பார்ப்போம். இந்திய நேரப்படி இன்றைய ஆட்டம் 12:30 மணியளவில் துவங்குகிறது. 


Advertisement