
286 runs in one ball myth reality Australia vs Victoria
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே மாதம் 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நாளையுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவு பெரும் நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடிவருகிறது. பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் அதிகமான ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் 1894 ஆம் ஆண்டு நடத்த ஒரு கிரிக்கெட் போட்டி பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விக்ட்டோரியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடந்த போட்டியில் பேட்ஸ்மேன் பந்தை தூக்கி அடித்துள்ளார். பந்து மைதானத்தில் இருந்த மரத்தில் மாட்டிக்கொள்ள, பந்தை எடுக்கும் வரை பேட்மேன்கள் ரன் ஒடி உள்ளன்னர்.
சுமார் 6 கிலோ மீட்டர் அளவுக்கு அவர்கள் ஒடி 286 ரன்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுவே கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்தில் எடுத்த அதிகபட்ச ரன் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் உண்மையா? பொய்யா என இணையத்தில் பல்வேறு விதமான விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இருப்பினும் இதுகுறித்து ஆதாரபூர்வமாக எந்த ஒரு தகவலும் இல்லை.
#PAKvBAN
— Toddler (@SteadyToddler) July 5, 2019
This pic might bring some hope for Pak. Focus on Trees....😂 pic.twitter.com/ciGqEtO0V0
Advertisement
Advertisement