நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
சத்தீஸ்கரில் சோகம்... காதலியால் வந்த வினை.!! ரயில் முன் பாய்ந்த 25 வயது இளைஞர்.!!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. காதலியால் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரவ்(25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கௌரவிற்க்கு இளம்பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கௌரவ் மற்றும் அந்த இளம் பெண் காதலித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் அந்தப் பெண் கௌரவ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக காவல்துறையில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து கௌரவை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் கௌரவ்.
இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!
தான் காதலித்த பெண்ணே தன் மீது கற்பழிப்பு புகார் செய்ததால் மன அழுத்தத்தில் இருந்த அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தேவாலயத்தில் தொங்கிய கன்னியாஸ்திரி சடலம்... கேரளாவில் மதுரை பெண் தற்கொலை.!! போலீசில் சிக்கிய கடிதம்.!!