2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எந்த நாட்டில் நடைபெறப் போகிறது தெரியுமா? அதிலும் தனி சிறப்பு உண்டு

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எந்த நாட்டில் நடைபெறப் போகிறது தெரியுமா? அதிலும் தனி சிறப்பு உண்டு


2023 worldcup held in India

ஐசிசி 12 ஆவது உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. 

இந்நிலையில் அடுத்து 2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 13 ஆவது உலக்கோப்பை தொடர் எந்த நாட்டில் நடைபெறுகிறது என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இதற்கான பதில் இதோ. 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் தான் நடைபெற போகிறது. 

Worldcup2023

இந்த உலக்கோப்பை தொடரை தான் முதல் முறையாக இந்தியா தனித்து ஏற்று நடத்தவுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 1987, 1996, 2011 ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடர்கள் நடந்துள்ளன. ஆனால் அந்த 3 தொடர்களையும் இந்தியா மட்டும் நடத்தவில்லை. 

1987 கிரிக்கெட் உலக்கோப்பை தொடரை பாக்கிஸ்தானுடனும், 1996ல் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையுடனும், 2011ல் இலங்கை மற்றும் வங்காளதேசத்துடனும் இணைந்து நடத்தியுள்ளது. அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை தான் இந்தியா முதல் முறையாக தனியாக நடத்தவுள்ளது.