ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று வாங்கிய கோப்பையை, நீட்டா அம்பானி எங்கு வைத்துள்ளார் தெரியுமா?

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று வாங்கிய கோப்பையை, நீட்டா அம்பானி எங்கு வைத்துள்ளார் தெரியுமா?


2019 ipl cup


ஐபிஎல் 12 வது சீசன் பரபரப்பாக நடந்து முடிவடைந்தது.  போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

 மும்பை அணி நான்காவது முறையாக ஐபிஎல் தொடரை வென்று, இதுவரை அதிக முறை ஐபிஎல் தொடரை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது மும்பை அணி. இதனையடுத்து மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். 

இந்தநிலையில் ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் அதன் உரிமையாளர் நீட்டா அம்பானி ஐபிஎல் கோப்பையை அவரது வீட்டில்  கிருஷ்ணர் முன் வைத்து வழிபட்ட வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.