வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
18 வயதில் சர்வதேச டி20 போட்டியில் புதிய உலக சாதனை.. பிரான்ஸ் வீரர் அசத்தல்..!
பிரான்ஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த கஸ்டவ் மெக்கான் என்ற 18 வயது இளைஞர் சர்வதேச டி20 வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கு பெறக்கூடிய ஐரோப்பா அணிகளுக்கான தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரான்ஸ் அணியின் கஸ்டவ் மெக்கான் 58 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அவருடைய தற்போதைய வயது 18 ஆண்டுகள் 280 நாட்கள்.
இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் ஹசரத்துல்லா ஷாஷாய் 20 வயது 337 நாட்களில் அடித்த சர்வதேச டி20 சதமே சாதனையாக இருந்தது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் சுரேஷ் ரெய்னா மற்றும் கே எல் ராகுல் முதல் 15 இடங்களில் உள்ளனர்.