காதலனுடன் ஹோட்டலில் இளம்பெண்!! அலறியடித்து கதவை திறந்த சகோதரன் கண்ட கொடூர காட்சி!! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் காதல் – உறவுகள்

காதலனுடன் ஹோட்டலில் இளம்பெண்!! அலறியடித்து கதவை திறந்த சகோதரன் கண்ட கொடூர காட்சி!!

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர்  ஐதராபாத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் அரசு போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார். அதே பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தவர் மானஸ்வி. இந்நிலையில் இவைகள் இருவருக்கும் இடையே நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் நன்றாக பழகிவந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே ஒரு சில காரணங்களால் மனதிற்கு பிடிக்காமல் மானஸ்வி, வெங்கடேஷ் உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், மானஸ்வியிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி, ஓட்டல் ஒன்றிற்கு அழைத்து வற்புறுத்தியுள்ளார்.

lover க்கான பட முடிவு

அதனை நம்பி ஹோட்டல் ஒன்றில் வெங்கடேசன் எடுத்து வைத்திருந்த தனியறைக்கு மானஸ்வி சென்றுள்ளார். அங்கு இருவரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியுள்ளது. மேலும் வெங்கடேஷ் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு வெங்கடேசால் ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என அஞ்சிய மானஸ்வி உடனே தன்னுடைய சகோதரனுக்கு போன் செய்து, என்னுடைய உயிருக்கு ஆபத்து விரைந்து வா எனக்கூறியுள்ளார். மேலும் தான் இருந்த ஹோட்டலின் முகவரியையும் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மானஸ்வியின் சகோதரன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து, ஹோட்டல் ஊழியர்களின் உதவியோடு அறையை திறந்துள்ளார். அப்போது அங்கு கழுத்தில் அதிக ரத்தம் வெளியேறியபடியே மானஸ்வி உயிருக்கு போராடியுள்ளார். மேலும் வெங்கடேஷ் கையில் அறுக்கப்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து விவரமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo