காதல் தோல்வியில் இருந்து மீள்வதற்கான எளிய வழிகள்; உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

காதல் தோல்வியில் இருந்து மீள்வதற்கான எளிய வழிகள்; உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்


how-to-get-out-of-love-failure

வாழ்க்கையில் காதல் இருக்கலாம் ஆனால் காதலே வாழ்க்கை என்று இருந்துவிட கூடாது. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக யாராவது ஒருவர் மீது ஒரு நேரத்தில் காதல் வரத்தான் செய்யும். அதை வெளியில் சொல்ல தைரியம் உள்ளவர்கள் தான் விரும்புவோர் அந்த நபரிடம் தன் காதலைச் சொல்லி விடுகின்றனர். சிலர் வெளியில் சொல்ல முடியாமல் தங்கள் காதலை மனதின் உள்ளே வைத்து புதைத்து விடுகின்றனர்.

ஒருவர் மற்றொருவர் மீது காதல் கொள்வதற்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம். காதலின் குணமும் காதலர்களை பொறுத்து பல பரிமாணங்களை பெறுகின்றது. சிலர் காதல் என்ற பெயரில் வெறுமனே நேரத்தை கழிப்பதற்காக பழகுகின்றனர். சிலர் நம்மை சுற்றியுள்ள அனைவரும் காதலிக்கிறார்கள் நாமும் காதலித்தாள் என்ன என்பதற்காக ஒரு துணையைத் தேடிக் கொள்கின்றனர்.

love failure

ஒரு சிலர் சிறுவயதில் இருந்து நண்பர்களாக பழகி பின்னர் காதலர்களாக மாறுகின்றனர். பள்ளிகளில் கல்லூரிகளில் வேலை செய்யும் இடங்களில் என எல்லா இடங்களிலும் காதல் உருவாகின்றது. சிலர் வெறும் அழகை மட்டும் பார்த்தும் வேறு சிலர் ஒருவரின் நல்ல குணங்களை பார்த்தும் காதலிக்க துவங்குகின்றனர். 

காதல் இப்படி எந்த வகையில் உருவாகினாலும் காதல் தோல்வி என்பது அனைவரையும் ஒரே விதத்தில் தான் பாதிக்கின்றது. காதல் எப்படி எந்த இடத்தில் துவங்கியிருந்தாலும் காதல் தோல்வி வரும் பொழுது அனைவருக்கும் உண்டாகும் வலி ஒரே மாதிரி தான் உணரப்படுகிறது. அந்த வலியில் இருந்து ஒவ்வொருவரும் எப்படி வெளியில் வருகின்றனர் என்பதுதான் இங்கு வேறுபடுகின்றது. இதற்கு நம்மைச் சுற்றி நிகழும் சூழ்நிலைகளும் உறவுகளும் பெரும் காரணமாக விளங்குகின்றது.

love failure

சிலர் தாங்களாகவே தங்கள் குடும்பத்தையும் பொறுப்புகளையும் உணர்ந்து அந்த வலியில் இருந்து வெளியில் வந்து விடுகின்றனர். சிலர் தங்கள் நண்பர்களாலும் உறவினர்களாலும் தேற்றப்பட்டு அந்த வலியில் இருந்து வெளியே  கொண்டுவரப்படுகின்றனர். ஆனால் ஒரு சிலர் தங்கள் மனதில் இருக்கும் வலியினை யாரிடமும் வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மிகவும் சிரமப்படுகின்றனர். 

நாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் நபர்கள் நம்மை விட்டு பிரியும் பொழுது இந்த உலகமே நம்மை விட்டு விலகிச் சென்று விட்டதாக சிலர் உணர்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கும் சாதிப்பதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக அவர்கள் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற பொறுப்பு இருக்கும். காதலில் தோல்வியுற்றவர்கள் அப்படியே ஒரே இடத்தில் இருந்துவிடாமல் தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளின் மீது முதலில் கவனத்தைச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

love failure

பின்னர் அந்த பொறுப்புகளை எப்படியெல்லாம் நிறைவேற்ற முடியும் என சிந்திக்க வேண்டும். அதற்கான புதிய வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்யும் பொழுது நமது மனதில் தோன்றும் சிந்தனைகள் அனைத்தும் நம் காதலை மறந்து நமக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டும்.

காதலில் தோல்வியுற்றவர்கள் முதலில் தன்னுடைய பழைய அனுபவங்களை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திக் கொள்வது நல்லது. நாம் அவ்வாறு ஒவ்வொரு முறையும் பகிரும் போது நமக்கு பழைய நினைவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. எனவே தன்னுடைய காதலைப் பற்றி பேசாமல் இருப்பதே மிகவும் சிறந்தது.

love failure

பெரும்பாலானவர்கள் காதலிக்கும் முன்பு நண்பர்களுடன் அதிகமாக பழகியிருப்பர். ஆனால் தனக்கென ஒரு காதலி வந்த பிறகு நண்பர்களுடன் பழகுவதை குறைத்து கொண்டிருப்பார். அப்படிப்பட்டவர்கள் தங்கள் காதல் தோல்வி அடைந்ததை நம் நண்பர்களுடன் மீண்டும் சேர்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று எண்ண வேண்டும்.

தன் பழைய நண்பர்களுடன் தங்கள் உறவை புதுப்பிக்க துவங்க வேண்டும். அவர்களோடு மீண்டும் நெருங்கி பழக ஆரம்பிக்கலாம். ஏனெனில் உண்மையான நண்பர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாக தான் இருப்பார்கள். கண்டிப்பாக வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நண்பர்களோடு வெளியில் சுற்றுலா செல்லலாம். இவ்வாறெல்லாம் ஒருவர் தன்னை ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்வது மூலம் அவருக்கு காதல் பற்றிய எந்த ஒரு பழைய நினைவுகளும் வராமல் இருக்க வாய்ப்பு அதிகம்.

love failure

இவ்வாறு காதலில் தோல்வியுற்றவர்கள் ஒரே இடத்தில் முடங்கிவிடாமல் தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்களுடன் தங்கள் நேரத்தை செலவழிக்க துவங்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு விஷயத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் அவர்களுடைய காதலை மறந்து அவர்கள் எதிர்காலத்தை கண்டிப்பாக உருவாக்க முடியும். 

இதனை நீங்களும் படித்து உங்களை சுற்றி இருக்கும் காதலில் தோல்வியுற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களை அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு துணையாக இருங்கள்.