லைப் ஸ்டைல் ஆன்மிகம் காதல் – உறவுகள்

ஆசை காட்டி மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிஎஸ்பி; கையும் களவுமாக சிக்கவைத்த கணவர்

Summary:

dsp illegal affair with married women

ஆந்திராவில் கணவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மனைவியை தன் மாய வலைக்குள் சிக்க வைத்த டிஎஸ்பி தற்போது தலைமறைவாகியுள்ளார். அந்த பெண்ணின் கணவர் டிஎஸ்பியை எப்படி சிக்க வைத்தார் என்பது தான் இங்கு சுவாரசியமான விஷயம்.

சித்தூர் மாவட்டம் கிலிகிரியைச் சேர்ந்த பிரசாத் மற்றும் தனலட்சுமி தம்பதியர் வேலை தேடி ஹைதராபாத் சென்றுள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சென்ற இடத்தில் தனலட்சுமியுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறை டிஎஸ்பி துர்கா பிரசாத் அறிமுகமாகியுள்ளார். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள தனலட்சுமியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் டிஎஸ்பி துர்கா பிரசாத்.

dhanalakshmi and dsp க்கான பட முடிவு

அதனைதொடர்ந்து தனலட்சுமியின் கணவர் பிரசாத்துக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி உள்ளார் டிஎஸ்பி. அவரை நம்பிய தனலட்சுமி டிஎஸ்பி உடன் நெருக்கமாக பழக தொடங்கியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் படுக்கை அறையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

இந்த நிலையில் டிஎஸ்பி துர்கா பிரசாத் அமராவதி அருகிலுள்ள மங்களகிரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து தனலட்சுமியின் குடும்பத்தாரை திருப்பதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார் டிஎஸ்பி. தனலட்சுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்த டிஎஸ்பி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். நாளடைவில் இதனை அறிந்துகொண்ட தனலட்சுமியின் கணவர் பிரசாத் டிஎஸ்பியை எப்படியாவது கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என திட்டம் தீட்டினார்.

Andhra policemen sex in bed க்கான பட முடிவு

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை தனலட்சுமியை தொடர்புகொண்ட டிஎஸ்பி திருப்பதியில் உள்ள அவரது வீட்டிற்கு வருவதாக தகவல் கூறியுள்ளார். இதை எப்படியோ அறிந்து கொண்ட தனலட்சுமியின் கணவர் பிரசாத் டிஎஸ்பி வீட்டிற்கு வந்தவுடன் அருகில் இருந்த திருச்சானூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் தனலட்சுமியின் வீட்டிற்கு காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட டிஎஸ்பி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். வீட்டில் இருந்த தனலட்சுமியை அழைத்துச் சென்ற காவல்துறையினர் நடந்த சம்பவங்களை பற்றி விசாரித்து வருகின்றனர் மேலும் தலைமறைவாக உள்ள டிஎஸ்பியை தேடி வருகின்றனர்.


Advertisement