புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆண்களே, பெண்களே.. எச்சரிக்கை.. கல்யாணத்தை தள்ளிப்போட திட்டமா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
இன்றளவில் சாதித்த பிறகு திருமணம் என்ற எண்ணம் இளைஞர்களின் தாரக மந்திரமாகியுள்ள நிலையில், பெண்களில் சிலரும் இம்மாற்றத்தை கையில் எடுக்க தொடங்கியுள்ளனர். அது அவர்களின் சூழ்நிலையாகிப்போவது கொடுமையின் உச்சம் என்று தான் கூற வேண்டும். தாமதமாக 35 வயது வரை திருமணம் செய்யாமல் இருப்பது, இலக்கை அடைந்து திரும்பி பார்க்கையில் இளமையை மட்டும் தொலைத்து இருப்போம்.
15 வயதில் இளமைக்கு வந்து, உடல் தேவையை அனுபவிக்க வேண்டிய சராசரி வயதில் கொள்கை என 35 வயது வரை திருமணம் செய்யாமல் வாழ்வது இயற்கைக்கு எதிரான வாழ்க்கை ஆகும். இதனால் ஏற்படும் பின்விளைவை கட்டாயம் அனுபவிக்க வேண்டும். தாமதம் கொண்ட திருமணம் என்பது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். கருத்தரிக்க தாமதம், கருத்தரித்தல் சுகப்பிரசவம் கேள்விக்குறி போன்ற பிரச்சனை பெண்களுக்கு ஏற்படும்.
புகை, மது, போதை என்ற பழக்கத்தை கொண்டவர்கள் தாமதமாக திருமணம் செய்து, தந்தை அல்லது தாயாகும் வாய்ப்பையும் இழக்கிறார்கள். காம இச்சையை தீர்க்க ஆபாச படம், கதைகள் என செல்ல, தற்காலிக சுய இன்பம் நிரந்தரமாகி வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி எய்ட்ஸ், கள்ளக்காதல் போன்றவற்றை ஏற்படுத்தும். இன்றுள்ள மேலைநாட்டு கலாச்சாரா புரிதல் இன்மை பிரச்சனை காரணமாக 15 வயதில் உள்ளவர்களுக்கு பாலியல் குறித்த விவாதமும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்ற வகையிலேயே இருக்கிறது.
தகுந்த வயதில் சட்டம் அனுமதிக்கும் வயது ஆரம்பித்ததும் திருமணம் செய்தால் சுபம். அதுவே நல்ல ஆரோக்கிய வாழ்க்கைக்கும், புரிதலுக்கும் அடித்தளமிடும்.