கள்ளக்காதல் மோகம், பிஞ்சுக்குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு!

கள்ளக்காதல் மோகம், பிஞ்சுக்குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு!


court cancelled parol request for abirami

சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் விஜய், இவரது மனைவி அபிராமி. இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.

இந்நிலையில் அபிராமி பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட  கள்ளக்காதலால் தனது இருகுழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.
  
பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அபிராமி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அபிராமி கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆனநிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.