தமிழகம் காதல் – உறவுகள்

திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலே, கோவிலுக்கு வெளியே காதல்ஜோடி செய்த காரியம்! அதிர்ச்சியில் குடும்பத்தார்கள்!

Summary:

couples commit suicide after getting marriage in temple

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே ராமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்குமார். மேலும் செம்பாகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கவிதா. இருவரும் ஆத்தூர் அடுத்த சென்னிமலை பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி. ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பர் என அவர்கள் அஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் நேற்று  ஈரியூர் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அருஞ்சோலையம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்பு கோயிலின் வெளிப்புறம் உள்ள இரும்புகொட்டகையில் இருவரும் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார்கள் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement