BREAKING: வரும் வழியிலே விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! மாமல்லபுர பொதுக்கூட்டத்தில் தவெக பேனர்கள், கொடிகள் அகற்றம்! திடீர் பரபரப்பு...!
தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இன்று முக்கியமான பொதுக்குழு கூட்டத்தால் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் மற்றும் கூட்டணிக் கொள்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டம்
விஜய் தலைமையில் நடைபெறும் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை தொடங்குகிறது. கூட்டணியைப் பற்றிய முக்கியமான அறிவிப்பை விஜய் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் மாமல்லபுரம் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை! கூட்டத்தின் இடம், தேதி, நேரம் அறிவிப்பு.! சூடு பிடிக்கும் தவெக அரசியல்..!!!
பேனர்கள் அகற்றியதில் பரபரப்பு
விஜய் கூட்டத்தில் பங்கேற்க மாமல்லபுரம் வந்தபோது, அங்கு கட்சியின் பேனர்கள் மற்றும் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் காவல்துறையினர் அவற்றை அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாகக் கூறி அகற்றினர். இதனால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர் மற்றும் காவல்துறை தேவையற்ற நெருக்கடி கொடுத்ததாக குற்றம் சாட்டினர்.
காவல்துறையின் விளக்கம்
அனுமதி இல்லாமல் பேனர்கள் மற்றும் கொடிகள் வைக்கப்பட்டதால் நடவடிக்கை எடுத்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் புதிய பாதை அமைக்கும் வகையில் விஜய் தலைமையிலான கூட்டம் முக்கிய திருப்புமுனையாக இருக்கலாம். இன்று நடைபெறும் இந்த கூட்டம், மாநில அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் வகையில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விசில் பறக்கும் விஜயின் ஸ்பீச்! மாமல்லபுரத்தில் த.வெ.க.வின் சிறப்பு கூட்டம்! அடுத்தக்கட்ட அரசியல் ஆலோசனை!