அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
#Breaking: துணை முதல்வராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்?... அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி.!
கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த திமுக கூட்டணி சார்பில், தமிழ்நாடு முதல்வராக மு.க ஸ்டாலின் தனது ஆட்சியை வழங்கி வருகிறார். தற்போது வரை துணை முதல்வர் பதவி யாருக்கும் வழங்கப்படவில்லை.
இன்று தமிழ்நாடு முதல்வர் சார்பில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், கோவையில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைதொடர்ந்து பல அமைச்சர்களும் தங்களின் சார்பில் வெவ்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகளில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அப்போது, மாணவர்கள் மத்தியிலும் அவர்கள் உரையாற்றினார்.
இதையும் படிங்க: கிளை சிறைகளை மூடுவதற்கு தயாராகும் தமிழ்நாடு அரசு?.. அண்ணாமலை பரபரப்பு கண்டனம்.!
இந்நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் மாவட்ட அரசு கலை & அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்து, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, "அமைச்சர் உதயநிதியை வரும் 19 ம் தேதிக்கு பின்னர் துணை முதல்வர் என அழைக்க வேண்டும்" என கூறினார். அதாவது, வரும் 19 ம் தேதிக்கு பின்னர் தான், அமைச்சர் உதயநிதியை துணை முதல்வர் என சொல்ல வேண்டும் என்று பேசினார். இதனால் அமைச்சர் உதயநிதி 19 ம் தேதிக்கு பின் துணை முதல்வர் பொறுப்பு ஏற்கிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பகுஜன் சமாஜ்வாதி தமிழ்நாடு தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம்; அடுத்த அதிரடி கைது.!