அரசியல் தமிழகம்

தேர்தல் அவசரம்: ஆண் குழந்தைக்கு பெண் பெயர் வைத்த அமைச்சர்; சிரிப்பலையில் அதிர்ந்த தேர்தல் களம்.!

Summary:

thiruppur - senkottaian mp - comedy - baby name

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், புதுச்சேரி தொகுதிக்கும் பாராளுமன்ற தேர்தல் என மூன்று வகையான தேர்தல் வரும் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவருடன் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜா என்கிற ராஜாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

திருப்பூர் மாவட்டம் கோபி ஒன்றியம் பெரியார் நகர் பகுதியில் பிரச்சாரம் செய்யும்போது அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்-பிரியா தம்பதியினர் தங்களது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று அமைச்சருடன் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அமைச்சர் செங்கோட்டையன் அக்குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார்.

இதனால் அக்குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அக்குழந்தை ஆண் குழந்தை ஆகும். இதனால் அங்கிருந்த பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அனைவரும் சிரிக்க தொடங்கினர். இதனால் தேர்தல் களம் சிரிப்பலையில் அதிர்ந்தது.

இதனை கட்சி தொண்டர்கள் மூலம் அறிந்த அமைச்சர் சமாளித்தவாறு பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி அந்த குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று மீண்டும் புதிய பெயரை சூட்டினார். இதனால் அங்கு நகைச்சுவையுடன் கலந்த பரபரப்பு சிறிதுநேரம் காணப்பட்டது.


Advertisement