டீ குடித்துக்கொண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீபிரியா.! களமிறங்கிய பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி.!

டீ குடித்துக்கொண்டே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீபிரியா.! களமிறங்கிய பிக்பாஸ் சுரேஷ் சக்கரவர்த்தி.!


suresh-chakaravarthi-election-canvas

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முக்கிய அங்கம் வகிக்கின்றது. 

இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக நடிகை ஸ்ரீபிரியா களமிறங்குகிறார். இதனையடுத்து அவர் வீதி வீதியாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

mnm

மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா தேர்தல் பிரச்சாரத்தின் போது சாலையோர கடை ஒன்றில் டீ அருந்தியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அந்த சமயத்தில் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியும் ஸ்ரீபிரியாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.