BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கருப்பு உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்! இணையத்தில் வைரல்...
சினிமா, இசை இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மகளாக மட்டுமன்றி, தனது திறமையால் பலரின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
திரை உலகில் முதல் அடியெடுத்து வைத்த ஸ்ருதி
'ஹேராம்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி, பின்னர் 2009 முதல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நெருக்கம் பெற்று, அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்தார்.
தனுஷுடன் 3, விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ள ஸ்ருதி, முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
இதையும் படிங்க: "கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
காதல் வாழ்க்கை
ஸ்ருதி ஹாசன் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் பிரிந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்கியது.
கருப்பு உடையில் இணையத்தை கவர்ந்த புகைப்படங்கள்
இந்நிலையில், கருப்பு நிறத்தில் ட்ரெண்டாகும் ஹொட் உடையில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. ரசிகர்களிடையே வைரலாகும் இந்த புகைப்படங்கள் லைக்குகள் மற்றும் கமெண்ட்களைக் குவித்து வருகின்றன.
இதையும் படிங்க: நடிகை ஸ்ரீலீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை – இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப்படங்கள்!