விழா மேடையில் வைத்து தாசில்தாருக்கு ஆப்பு வைத்த முதலமைச்சர்!.. அதிரடி நடவடிக்கையால் திகைத்த அதிகாரிகள்...!!

மத்தியபிரதேசத்தில் விழா மேடையில் புகாருக்குள்ளான வட்டாச்சியருக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இடமாற்ற உத்தரவை பிறப்பித்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்ட வட்டாச்சியராக இருந்து வந்தவர், தருண் பட்நாகர். இவர் தனது கடமைகளை சரிவர செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அங்கு நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் வைத்து அவரையும், அவரைப்போல புகாருக்குள்ளான தாசில்தார் சந்தீப் சர்மாவையும் இடமாற்றம் செய்வதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடியாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரையும், தாசில்தாரையும் மேடையில் வைத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிவித்தது, விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.