ஏன் என்னாச்சு....ஆதவ் அர்ஜுனா ஷாக்! தவெக துண்டை தோளில் போட மறுத்த செங்கோட்டையன்! அதுக்கு அவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?



sengottaiyan-joins-taveka-vijay-latest-news

தமிழக அரசியலில் மாற்றத்தின் சுவாசம் வீசும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் தலைமையில் உருவாகும் புதிய அரசியல் சக்திக்கு இது முக்கிய பலமாக மதிக்கப்படுகிறது.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கட்சித் துண்டை செங்கோட்டையன் தோளில் போட்டார்.

இதையும் படிங்க: அதிமுக வுக்கு அதிர்ச்சி! சிறிய காலத்திலே பெரிய மாற்றம்! முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தவெகவில் இணைவு? ஆதவ் அர்ஜூனா நடத்திய ரகசிய சந்திப்பு!

“துண்டு போட்டா கிண்டலடிப்பாங்க” – செங்கோட்டையன்

கட்சித் துண்டு அணிவிக்கப்பட்டபோது, அதை உடனே எடுத்து வைத்துக்கொண்ட செங்கோட்டையன், “துண்டு போட்டா கிண்டலடிப்பாங்க” என நகைச்சுவையாக கூறியதோடு, அதை ஆதவ் அர்ஜுனா மீண்டும் எடுத்துச் சென்றார். இந்தச் சம்பவம் அங்கிருந்தோரிடம் சிறு சிரிப்பை ஏற்படுத்தியது.

தன்னுடைய இணைப்பு குறித்து விளக்கம்

பின்னர் பேசிய செங்கோட்டையன், “நான் தவெகவில் இணைவதற்கான காரணங்கள் பல. திமுகவும் அதிமுகவும் வேறு வேறு போல இருந்தாலும், ஒரே பாதையில் தான் செல்வதாக மக்கள் உணர்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவை என்பது அனைவரின் எண்ணம்” என்று கூறினார்.

மேலும், “இப்போது பள்ளிக் குழந்தைகள் கூட ‘அப்பா, அம்மா விஜய்க்கு ஓட்டு போடுங்க’ என்று கூறும்ளள அளவுக்கு, தூய்மையான ஆட்சிக்கான நேரம் வந்துவிட்டது. இதற்காக இளவல் விஜய் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி உள்ளார்” என்றும் அவர் தெரிவித்தார்.

மொத்தத்தில், செங்கோட்டையனின் தவெகவில் இணைப்பு, மாநில அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு தளம் அமைத்துள்ளதாக பார்ப்பர் அரசியல் விமர்சகர்கள்.

 

இதையும் படிங்க: புதிய அதிரடி திருப்பம்! அடுத்தடுத்து செங்கோட்டையன் செய்யும் தரமான சம்பவம்! அதிர்ச்சியில் இபிஎஸ்..!