மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
நாம் தமிழர் கட்சி சீமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அவரே வெளியிட்ட தகவல்.!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது. இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில் 2015-2016ம் ஆண்டு வருமான வரி கணக்கில் 29,439 ரூபாய் வருமானம் என்று காட்டியுள்ளார். ஆனால் 2019-2020ம் ஆண்டு வருமான வரி கணக்கில் ஆயிரம் ரூபாய்தான் என்று காட்டியுள்ளார்.
இதன் மூலம் சீமான் வருமானம் குறைந்ததாக காட்டியுள்ளார். ஆனால் அவரது மனைவி கயல்விழிக்கு வருமானமாக 2015-2016ல் 12,939 காட்டியுள்ளார். ஆனால் 2019-20ம் ஆண்டு 72,820 என காட்டியுள்ளார். சீமானுக்கு அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என்றும் சீமான் தெரிவித்துள்ளார். தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.