சிக்குவாரா பன்னீர்செல்வம்? மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட சசிகலா தரப்பு முடிவு!!

சிக்குவாரா பன்னீர்செல்வம்? மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட சசிகலா தரப்பு முடிவு!!



sasikala team is ready to release the video from hospital

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை வளையத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை கொண்டு வர வேண்டும் என்று சசிகலா தரப்பு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர்  ராஜா செந்தூர்பாண்டியன் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

jeyalalitha dead case

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா ஆடியோவை, மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டி உறுதி செய்தார்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புகிறேன்.

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயாராகதான் இருக்கிறோம், ஆனால் ஆணையம் தடை போட்டுள்ளது.மேலும்  இதுவரை விசாரிக்கப்பட்ட எவரிடமும் சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை விசாரித்தால் அவர் இந்த வழக்கில் சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.