"எத்தனை கணக்கு போட்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது" - சசிகலா பரபரப்பு பேட்டி.!

"எத்தனை கணக்கு போட்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது" - சசிகலா பரபரப்பு பேட்டி.!


Sasikala speech about admk past

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் எத்தனை கணக்கு போட்டாலும் தான் இருக்கும் வரை அதிமுகவை அழிக்க முடியாது என சசிகலா பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, "அதிமுக கட்சி ஏராளமான உண்மை தொண்டர்களின் தியாகத்தால் மட்டுமே உருவான இயக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர், "எதிர்க்கட்சிகள் எத்தனை கணக்கு போட்டாலும், தான் இருக்கும் வரை அதிமுக கட்சியை அழிக்க முடியாது என்று கூறிய நிலையில், எம்.ஜி.ஆர் இறந்த போது கட்சியில் இப்படித்தான் சோதனை ஏற்பட்டது" என தெரிவித்துள்ளார்.thanjavurமேலும், "தற்போதும் அம்மா இறந்த பிறகு இதுபோன்ற சோதனைகள் ஏற்படுவதாகவும், அன்றைக்கு எவ்வாறு கட்சி மீண்டதோ, அதே போல் விரைவில் அதிமுக புதுப்பொலிவுடன் உன்னத நிலையை அடையும்" என்றும் கூறியிருக்கிறார்.