அ.தி.மு.க-வுக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்: திருத்தணியில் சசிகலா அதிரடி..!

அ.தி.மு.க-வுக்கு நான் தலைமை ஏற்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்: திருத்தணியில் சசிகலா அதிரடி..!


sasikala-has-said-that-the-volunteers-want-the-aiadmk-t

தனது தலைமையின் கீழ் அ.தி.மு.க இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக வி.கே.சசிகலா கூறியுள்ளார்.

அ.தி.மு.க-வில் உள்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று சசிகலா தனது அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவுக்கு பல்வேறு இடங்களில் அ.தி.மு.க கொடியுடன் வந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருத்தணியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சசிகலா கூறியதாவது அ.தி.மு.க-வில் நடக்கும் பூசல்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அ.இ.அ.தி.மு.க-வை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அ.தி.மு.க இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். தொண்டர்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க தொண்டர்களும், பொது மக்களும் என்னுடன் இருக்கின்றனர்.

V K Sasikala

அ.தி.மு.க-வின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. நிச்சயமாக இந்த சிக்கல்கள் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை எனவே இதனை நாங்கள் சரி செய்வோம். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அ.தி.மு.க நிச்சயம் வரும்.

தி.மு.க-வை எங்களது எதிரியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க ஏழை எளியோர்களுக்கான கட்சி. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு 2 வது முறையாக கட்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலை நிச்சயம் சரி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.